உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.,ஐ சீண்டும் பிரியங்க்

மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.,ஐ சீண்டும் பிரியங்க்

பெங்களூரு: ''ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் உள்ளவர்கள் கடவுளை விட பெரியவர்களா?'' என, அமைச்சர் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பி உள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ்., குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதால், தேசிய அளவில் பிரபலமடையலாம் என்று கருதி செயல்பட்டு வருகிறார். இதற்கு அந்த அமைப்பினரும் சரியான நேரத்தில் தக்க பதிலடியை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து பிரியங்க் கார்கே கூறியதாவது: நம் நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு சரியான கணக்கு பராமரிக்கப்படுகிறது. கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்கப்படும் பணத்துக்கு கூட கணக்கு உண்டு. அப்படி இருக்கையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு கணக்குகள் ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதா என்பது சந்தேகமே. ஆர்.எஸ்.எஸ்.,சில் உள்ளவர்கள் கடவுளை விட பெரியவர்களா? அந்த அமைப்பு இன்னும் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை. முறைப்படி பதிவு செய்தால், வருமானம் கணக்கிடப்படும். வரி கட்ட வேண்டி இருக்கும். இதனால், அவர்கள் பதிவு செய்யாமல் உள்ளனர். அதுபோல அந்த அமைப்பில் உள்ளவர்கள் அறிவுடன் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V.Mohan
நவ 28, 2025 19:11

மறைமுகமாக காங்கிரஸூக்கு ஆதரவு கருத்து போடுபவர், முதலில் செய்தியை முழுதாக படித்தறிய வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.என்ற அமைப்பு அரசியல் சார்பு அற்ற அமைப்பு. எந்தவித மறைப்பும் இல்லாமல் தங்களது அமைப்பு செயல்பாடுகளை மூடிய அரங்கினுள் இல்லாமல், வெளியே திறந்த வெளி மைதானத்தில் நடத்தும் இயக்கம். தாய் நாட்டிற்கே முழுமுதல் முக்கியத்துவம் தரும் அமைப்பு. சற்றும் ஒழுங்கீனம் இல்லாது நடத்தப்படும் இயக்கம். பாரத மாதாவைப் பணிந்து வணங்கி உடல்நலம் பேண உடற்பயிற்சியுடன் மனதை ஒருமுகப்படுத்திதன்னலமற்ற சேவை செய்யும் உறுப்பினர்களை கொண்டது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தலைமையின் வழிகாட்டலில் பேரிடர் காலங்களில் முதலில் சென்று மக்களுக்கு சேவை செய்யும் இயக்கம். தேசத்தின் பெயரைக் கெடுக்கும் சில இயக்கங்கள் மற்றும் இந்து விரோத போக்கு கொண்ட கட்சிகள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் ஒழுங்கு, இயக்கப்பற்று மற்றும் கட்டுப்பாட்டை கூர்ந்து நோக்கி தங்களது கட்சியின் உறுப்பினர்கள் ஒழுங்கற்று இருப்பதால் வெறுப்படைந்து ஆதன் நீட்சியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பற்றி தீயவற்றை கூறுகின்றனர். முதல்கடமையாக """பாரதத்தாயை"""வணங்கும்படி கூறுவது சிறுபான்மையினருக்கு மதநம்பிக்கைப்படி மனதிற்கு ஏற்காததால் அந்த அமைப்பை குறை கூறுகின்றனர். சீர் தூக்கி பார்த்தால், நல்ல குணங்களும், தலைமை பண்புகளும் கொண்டவர்களாக ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் இருப்பது ஒழுங்கற்ற பொய் நிறைநாத அரசியல்வாதிகளுக்கு பிடிக்கவே பிடிக்காது.


திகழ் ஓவியன், AJAX ONTARIO
நவ 12, 2025 06:01

நீ ஓட்டு பிச்சை உன்னை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து பெற்றது...நீ மக்கள் சேவகன். உனக்கு கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை. மக்களின் கட்டளை மற்றும் கேள்விக்கு பதில் மட்டுமெ சொல்ல வேண்டும். ரொம்ப பேச கூடாது!


புதிய வீடியோ