உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ப்ரோ வாலிபால் லீக் போட்டி சங்க செயலர் ஜோசப் தகவல்

 ப்ரோ வாலிபால் லீக் போட்டி சங்க செயலர் ஜோசப் தகவல்

மைசூரு: ''மாவட்ட அளவில் 'ப்ரோ வாலிபால் லீக்' போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என, கர்நாடக மாநில சங்க செயலர் ஆண்டனி ஜோசப் தெரிவித்தார். சங்க தலைவர் ஹர்ஷன் கூறியதாவது: மைசூரு மாவட்ட வாலிபால் சங்கம், பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. புதிய விதிகள்படி, தாலுகா அளவில் குழுக்கள் உருவாக்க வேண்டும். அவற்றில் இருந்து மாவட்ட வாலிபால் சங்க நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். இதற்காக மூத்த விளையாட்டு வீரர்கள், ஏகலைவா விருது பெற்றவர்கள் பயிற்சியாளர்கள், ரசிகர்களின் முதற்கட்ட கூட்டம் விரைவில் கூட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார். செயலர் ஆண்டனி ஜோசப் கூறுகையில், ''வாலிபால் விளையாட்டை தாலுகா, பேரூராட்சி, பள்ளி, கல்லுாரி அளவில் கொண்டு செல்வதே சங்கத்தின் நோக்கம். மாவட்ட அளவில் ஆண், பெண் இருபாலருக்கும், 'ப்ரோ வாலிபால் லீக்' போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ''புதிய விதிகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்டவருக்கு சங்கத்தில் இடமில்லை. தற்போதைக்கு நிர்வாகிகள் தேர்தல் இல்லை. இந்திய தேசிய விளையாட்டு மேம்பாடு - 2011ல் வகுக்கப்பட்ட விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்