துங்கபத்ரா மதகுகளை மாற்ற ரூ.48 கோடியில் திட்டம்
பெங்களூரு : ''துங்கபத்ரா அணை மதகுகளை மாற்றுவதற்கு 48 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ளது,'' என, சிறிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் என்.எஸ்.போசராஜு தெரிவித்தார். மேல்சபையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது பா.ஜ., உறுப்பினர் ஹேமலதா நாயக், துங்கபத்ரா அணையின் மதகுகளின் நிலைமை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு சிறிய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என்.எஸ்.போசராஜு அளித்த பதில்: துங்கபத்ரா அணையில் உள்ள 33 மதகுகளையும் மாற்றுவதற்கு துங்கபத்ரா வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் பேச்சு நடத்தப்படும். ஆந்திரா, தெலுங்கானா அரசுகளின் அனுமதியை பெற்றவுடன், மதகுகளை மாற்றுவதற்கான நடைமுறை துவங்கும். மதகுகளை மாற்றுவதற்காக 48 கோடி ரூபாய் செலவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கு 15 மாத அவகாசம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.