மேலும் செய்திகள்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
08-Sep-2026
பெங்களூரு: கப் பன் பூங்காவுக்கு சொந்தமான இடத்தில் காபி கடை அமைப்பதற்கு, கப்பன் பூங்கா நடைப்பயிற்சியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. சங்கத் தலைவர் உமேஷ் கூறியதாவது: கப்பன் பார்க் மெட்ரோ நிலையம் அருகே, கப்பன் பூங்காவுக்கு சொந்தமான பகுதியில் காபி கடை கட்டப்பட்டு வருகிறது. அரசு பூங்கா நிலத்தில் 5 சதவீதம் பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் என்ற முடிவை மாநில அரசு திரும்ப பெற்ற போதிலும், காபி கடை அமைக்கப்படுகிறது. கப்பன் பூங்கா, நகரின் நுரையீரலாக இருக்கிறது. பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்க பூங்காக்கள் பெரிதும் உதவுகின்றன. பூங்கா நிலத்தில் ஒரு சிறிய பகுதியை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தினாலும், அது மற்ற உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, அப்பகுதியில் நடக்கும் கட்டுமான பகுதிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இவ்விஷயத்தில் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
08-Sep-2026