உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ரத்தானது

மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ரத்தானது

ராய்ச்சூர்:காஸ் சிலிண்டர், டீசல் விலை உயர்வுக்காக மத்திய அரசை கண்டித்து, ராய்ச்சூரின் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.இதற்கிடையில், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பதிலடியாக, நேற்று அதிகாலை பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.இந்திய ராணுவத்தின் பதிலடிக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைக்கும் நாட்டு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதனால் நேற்று காங்கிரஸ் நடத்தவிருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டது.காங்கிரஸ் மாவட்ட பொறுப்பு வகிக்கும் மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல் கூறுகையில், ''பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக, நம் ராணுவத்தினர் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்நேரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். எனவே, நேற்று நடக்கவிருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தப்படும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை