உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தயானந்தாவுக்கு ஆதரவாக போராட்டம் மடிவாளா தலைமை ஏட்டு கைது

தயானந்தாவுக்கு ஆதரவாக போராட்டம் மடிவாளா தலைமை ஏட்டு கைது

பெங்களூரு: பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி, போராட்டம் நடத்திய தலைமை ஏட்டு கைது செய்யப்பட்டார்.பெங்களூரு சின்னசாமி மைதானம் கூட்டநெரிசலில் 11 பேர் பலியானதற்கு பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை கண்டித்து, நேற்று மடிவாளா போலீஸ் நிலைய தலைமை ஏட்டு நரசிம்மராஜீ, விதான் சவுதாவிலிருந்து ராஜ்பவன் வரை நடந்து சென்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்.அப்போது, அவர் போலீஸ் சீருடையில் அம்பேத்கர் படத்தை வைத்துக் கொண்டு, கையில் கருப்பு ரிப்பன் கட்டிக் கொண்டு ஒற்றை ஆளாக, ராஜ்பவன் முன் நின்று போராட்டம் நடத்தினார்.அவர் பேசுகையில், ''கமிஷனர் தயானந்தா சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும். போலீஸ் துறைக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.அவரை விதான் சவுதா போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ