உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / புத்தாண்டில் சாதனை

புத்தாண்டில் சாதனை

புத்தாண்டு அனைவருக்கும், நன்மைகளை அளிக்க வேண்டும் என, இறைவனை வேண்டுகிறேன். மக்களின் வாழ்க்கையில் அமைதி, நிம்மதி நிலைக்கட்டும். பிரதமர் நரேந்திர மோடி, தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுகிறார். அவரது தலைமையில் நாடு வளர்ச்சி அடைகிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. புத்தாண்டில் இந்தியா சாதனைகள் செய்து, பல மைல் கற்களை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. உலகுக்கு முன்னோடியாகவும் திகழும். கனரக தொழில்கள் துறை, உள்நாட்டு உற்பத்தியை பலப்படுத்தவும், உருக்கு உற்பத்தி திறனை அதிகரிக்கவும், புதிய தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள், இந்தியாவை வல்லரசாக்க உதவும். -- குமாரசாமி மத்திய கனரக தொழில்கள் துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ