உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மண்ணில் புதைந்து ரயில்வே ஊழியர் பலி

மண்ணில் புதைந்து ரயில்வே ஊழியர் பலி

கார்வார்: ரயில்வே மேம்பால பணியின் போது, மண் சரிந்து விழுந்ததில் மண்ணில் புதைந்து, ரயில்வே ஊழியர் பலியானார். கதக்கின் முண்டரகி தாலுகா ஜவலடகி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் சேகப்பா, 33. இவர், ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஊழியராக வேலை செய்தார். உத்தர கன்னடாவின் தண்டேலியில் உள்ள ரயில்வே மேம்பால பகுதியில் நடக்கும் பணியில், மகேஷ் மேற்பார்வையாளராக பணியாற்றினார். நேற்று முன்தினம் இரவு பணி நடந்த இடத்தில் நின்ற போது, அங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த மண் திடீரென சரிந்தது. இதில் மகேஷ் மண்ணுக்குள் சிக்கினார். பொக்லைன் இயந்திரம் மூலம் சரிந்து விழுந்த மண் அகற்றப்பட்டது. மகேஷை மீட்கும் பணியில் சக ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் அவர் பிணமாகவே மீட்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை