உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இரு தொகுதிகளிலும் வெற்றி ராஜண்ணா நம்பிக்கை

 இரு தொகுதிகளிலும் வெற்றி ராஜண்ணா நம்பிக்கை

துமகூரு: ''பாகல்கோட் மற்றும் தாவணகெரே தெற்கு தொகுதிகளின் இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் ராஜண்ணா தெரிவித்தார். துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: காங்கிரசுக்கு ஆதரவாக எண்ணிலடங்கா வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தல் நடக்கவுள்ள பாகல்கோ ட், தாவணகெரே தெற் கு தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் கட்சிக்கு ஆதரவாக நிற்கும் அனைவருமே, ஏழைகள் தான். அவர்கள் எப்போதும் நன்றி உணர்வு மிக்கவர்கள். நாங்கள் அறிவித்தபடி, வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தினோம். அவை சிறப்பாக செயல்படுவதால், இரண்டு தொகுதி களிலும் நாங்களே வெற்றி பெறுவோம். இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் அல்லது மாற்றி அமைக்காமலும் இருக்கலாம். எனக்கு அ மைச்சர் பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கவலைப்படமாட்டேன். அதிகாரம் விஷத்தை போன்றது என்ற பழமொழி உள்ளது. விஷத்தை மிதமாக பயன்படுத்தினால் மருந்தாகவு ம் பயனளிக்கும். தற்போது புற்று நோய்க்கும், விஷத்தால் தான் மருந்து தயாரிக்கின்றனர். அதேபோல அதிகாரமும் விஷம் போன்றது. இதை பயன்படுத்துவோருக்கு நற் பயன்களை அளிக்கலாம் அல்லது பின் விளைவுகளையும் ஏற்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை