மேலும் செய்திகள்
மோதலால் உடையும் பா.ம.க.,!
02-Jun-2025
விஜயபுரா: “காங்கிரசை போன்று பா.ஜ.,விலும் குடும்ப அரசியல் பரவி வருவது வருத்தம் அளிக்கிறது,” என, விஜயபுரா பா.ஜ., - எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி புலம்பி உள்ளார்.விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் கட்சி மோசமான நிலைக்கு சென்றதற்கு, அக்கட்சியின் குடும்ப அரசியலே காரணம். பா.ஜ.,வில் குடும்ப அரசியல் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால் காங்கிரசை போன்று பா.ஜ.,விலும் தற்போது குடும்ப அரசியல் பரவி வருவது வருத்தம் அளிக்கிறது.இதை தடுத்து நிறுத்த, பா.ஜ., மேலிட தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப அரசியல் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றது இல்லை. கட்சியின் பின்னடைவுக்கு வழி வகுக்கும்.பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஒரு முறை அமைச்சராக இருந்துள்ளேன். இம்முறையும் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்க வேண்டும். இங்குள்ள சில தலைவர்கள் சூழ்ச்சி செய்து தடுத்து விட்டனர்.முன்னாள் முதல்வர் ஜே.எச்.படேல், ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோர் இப்போது நம்முடன் இல்லை. அவர்கள் இருவரும் என் அரசியல் குருக்கள். இதனால் என் தோட்டத்து வீட்டிற்கு படேல், ஹெக்டே பெயர்களை சூட்டியிருக்கிறேன். ஜே.எச்.படேல் படித்த பள்ளி மோசமான நிலையில் உள்ளது. இதை பற்றி அரசு கவலைப்படவில்லை. என் சொந்த செலவில் பள்ளியை புனரமைப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
02-Jun-2025