உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராஜினாமா செய்ய தயார்! துணை முதல்வர் கதறல்

ராஜினாமா செய்ய தயார்! துணை முதல்வர் கதறல்

பெங்களூரு: “கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்ததற்கு, நாங்கள் ராஜினாமா செய்து எதிர்க்கட்சிகள் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்,” என, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெங்களூரு சின்னசாமி மைதானம் முன் கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்ததை நினைத்து நான் கண்ணீர் விட்டேன். இதை மத்திய கனரக அமைச்சர் குமாரசாமி விமர்சித்துள்ளார். அவர் எந்தெந்த சந்தர்ப்பங்களில் கண்ணீர் விட்டார்; அவரால் எத்தனை குடும்பம் கண்ணீர் விட்டது என்று பதிவுகள் உள்ளன. தேவைப்படும் போது அதுபற்றி விவாதிக்கலாம்.எனக்கு எந்த விளம்பரமும் தேவை இல்லை. மக்கள் கொடுத்த பிம்பமே போதும். ஆர்.சி.பி., அணி வெற்றி பெற்றபோது, அதை கொண்டாட எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ன அறிக்கை வெளியிட்டனர். பின், அவர்கள் எப்படி பின்வாங்கினர் என்று எல்லாம் மக்களுக்கு தெரியும். இறந்த உடல்கள் மீது இழிவான அரசியல் செய்கின்றனர்.சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் வெளியே என்ன நடந்தது என்று அவர்களுக்கு தெரியவில்லை. பெங்களூரு நகர அமைச்சர் என்ற முறையில் மைதானத்திற்கு சென்று, நிலைமையை விளக்கினேன். நிகழ்ச்சி 10 நிமிடங்களில் முடிக்கப்பட்டது.எங்களை ராஜினாமா செய்ய சொல்லி எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். இது தான் அவர்கள் விருப்பம் என்றால் அதை நிறைவேற்றுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ