உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடகா முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சம்பளத்தை 100% உயர்த்த பரிந்துரை

கர்நாடகா முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சம்பளத்தை 100% உயர்த்த பரிந்துரை

பெங்களூரு: கர்நாடக முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோரின் சம்பளத்தை 100 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.இது தொடர்பாக மசோதா நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறியதாவது: முதல்வர், அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்களின் செலவு அதிகரித்து கொண்டே செல்கிறது. சாதாரண மனிதர்கள் கஷ்டப்படுகிறார்கள். எம்.எல்.ஏ.,க்களும் கஷ்டப்படுகிறார்கள். சம்பளத்தை உயர்த்த வேண்டும் என எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பலரிடம் இருந்து பரிந்துரை வந்தது. இதனால் இந்த முடிவை முதல்வர் எடுத்து உள்ளார். அனைவரும் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மற்றொரு அமைச்சர் பாட்டீல் கூறுகையில்,சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தை ஒப்பிடுகையில், சம்பளத்தை உயர்த்துவது தவறு கிடையாது என்றார்.

பா.ஜ., கேள்வி

மாநில நிதி நிலைமை மோசமாக உள்ள நிலையில், சம்பள உயர்வு தேவையா என பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.எவ்வளவு உயர்கிறதுகர்நாடக சட்டசபை சம்பளம், பென்சன் மற்றும் படிகள் திருத்த மசோதாப்படி, முதல்வரின் சம்பளம் ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாகவும்அமைச்சர்களின் சம்பளம் ரூ.60ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாகவும்எம்.எல்.ஏ.,க்கள் எம்.எல்.சி.,க்களின் சம்பளம் ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாகவும்பென்சன் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.95 ஆயிரமாகவும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.மேலும் போக்குவரத்து படி ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாகவும், சொந்த தொகுதியில் பயணம் மேற்கொள்ள ரூ.60 ஆயிரமாகவும்மருத்துவ படி, டெலிபோன் கட்டணம், தபால் கட்டண படி ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1.10 லட்சமாகவும்சபாநாயகர், சட்ட மேலவை தலைவர் சம்பளம் ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1.25 லட்சம் ஆகவும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Nandakumar Naidu.
மார் 21, 2025 09:19

இவர் சாவதற்கு முன் இவனுடைய பென்ஷனை உயர்த்திக்கொள்ள பார்க்கிறான். தேச,சமூக மற்றும் மக்கள் விரோத தீய சக்தி இவர்.


VENKATASUBRAMANIAN
மார் 21, 2025 07:27

எல்லோரும் தங்கள் சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்கட்டும். அப்புறம் சம்பள உயர்வு பற்றி பேசலாம். இவர்களுக்கு பென்ஷன் வேறு. கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டு பென்ஷன் வாங்குகிறார்கள். வெட்கமாக இல்லை. இவர்களுக்கு சம்பளம் எதற்கு


Subburamu Krishnasamy
மார் 21, 2025 07:26

Contesting elections and entering public life as rulers is supposed to be a social service to the society. Many electe peoples are crorepathis and income tax payers. Why again they are looting public money as pension. They are not definitely poor peoples. Living like modern Zamindars. It is a legal way of looting tax payers money. Government servants have to serve more than 15 to 20 years for pension, now pension itself is not assured. Giving pension to political netas is definitely illegal in nature


h
மார் 21, 2025 07:06

tax payers money thrown into dustbin


நிக்கோல்தாம்சன்
மார் 21, 2025 05:30

நிதி சுமை என்பது இவர்களுக்கு இல்லை, விடியாத மாநிலமாக்க முயற்சி


Appa V
மார் 21, 2025 02:35

கர்நாடகா 223 MLA க்களின் கணக்கில் காட்டப்படும் சொத்து மதிப்பு 14179 கோடி ரூபாய்கள். ரொம்ப வறுமையில் வாடுறாங்க ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை