உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆபத்தான மரக்கிளைகள் அகற்றம்

ஆபத்தான மரக்கிளைகள் அகற்றம்

மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, நகரில் ஆபத்தான நிலையில் இருக்கும் காய்ந்த மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. மைசூரு தசராவுக்கு நகரம் தயாராகி வருகிறது. இதற்காக அரசின் பல துறைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. நகரை சுற்றிப்பார்க்க 'டபுள் டெக்கர்' ஜம்பு சவாரி பஸ் செல்வதற்கு வசதியாக, ஆபத்தான நிலையில் உள்ள காய்ந்த மரக்கிளைகளை மைசூரு மாநகராட்சியின் தோட்டக்கலை பிரிவினர் அகற்றி வருகின்றனர். ஜம்பு சவாரி பஸ் செல்லும் பாதையான, அரண்மனையில் இருந்து பன்னி மண்டபம் வரையிலான சாலை ஓரங்களில் உள்ள பெரிய மரங்களின் ஆபத்தான கிளைகள் அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, நேற்று அரண்மனையை சுற்றி உள்ள சாலைகள், ஹார்டிங் சதுக்கம், சி.ஏ.டி.ஏ., அலுவலகம் சாலை, கே.ஆர்., சாலைகளில் உள்ள ஆபத்தான மரக்கிளைகள் அகற்றப்பட்டன. இப்பணி முடியும் வரை அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதுபோன்று, டபுள் டெக்கர் அம்பாரி பஸ் செல்லும் ஜே.எல்.பி., சாலை, சாமராஜா சாலை, ஹார்டிங் சதுக்கம், ரயில் நிலைய சாலைகளில் உள்ள ஆபத்தான மரக்கிளைகள் வெட்டப்பட்டன. அதுபோன்று சாமுண்டீஸ்வரி மின் விநியோக நிறுவனம் சார்பில், மின் விளக்கு அலங்காரத்துக்காகவும், மரக்கிளைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மாநகராட்சி தோட்டக்கலை துறை உதவி நிர்வாக பொறியாளர் மோகன் குமார் கூறுகையில், ''ஜம்பு சவாரி, டபுள் டெக்கர் பஸ் செல்லும் பாதைகளில் ஆபத்தான மரக்கிளைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்காக சிறப்பு குழுவும் தயார் செய்யப்பட்டு உள்ளது. ஆபத்தான மரங்கள் காணப்பட்டால், மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு மக்கள் தகவல் தெரிவித்தால், அவை அகற்றப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை