உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சாமுண்டீஸ்வரியை தரிசிக்க வரும் வி.ஐ.பி.,க்களுக்கு  கட்டுப்பாடுகள்

 சாமுண்டீஸ்வரியை தரிசிக்க வரும் வி.ஐ.பி.,க்களுக்கு  கட்டுப்பாடுகள்

மைசூரு: ''ஆஷாடா வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரியை தரிசிக்க வரும் வி.ஐ.பி.,க்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது,'' என, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் யதீந்திரா கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி: ஆஷாடா வெள்ளிக்கிழமைகளில், மைசூரு சாமுண்டீஸ்வரி தேவியை தரிசிக்க வரும், வி.ஐ.பி.,க்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. காலை 5:30 மணி முதல், காலை 9:30 மணி வரை மட்டுமே வி.ஐ.பி.,க்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். சிபாரிசு கடிதம் எடுத்து வருபவர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. விரைவு தரிசன டிக்கெட் 2,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், 300 ரூபாய் விரைவு டிக்கெட் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக இலவச பஸ் சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தசரா பண்டிகையின் போது கம்பாலா விளையாட்டு போட்டி நடத்துவதா அல்லது வேண்டாமா என மாநில அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. இவ்விஷயத்தில் முதல்வர் சிவகுமாரே இறுதி முடிவு எடுப்பார். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது குறித்து சிவகுமார் அல்லது சித்தராமையாவிடம் கேளுங்கள். பணம் வாங்கி விட்டு அமைச்சர் பதவி கொடுக்கும் வழக்கம் காங்கிரசுக்கு கிடையாது. எதிர்க்கட்சிகளிடமே, சூட்கேஸ் கலாசாரம் இருக்கிறது. இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !