உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரவுடி சுட்டுபிடிப்பு

ரவுடி சுட்டுபிடிப்பு

ஷிவமொக்கா:ஷிவமொக்கா டவுன் தொட்டபேட்டில் வசித்தவர் அம்ஜத், 30. இவர் கடந்த 2ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி அக்பர், 21, தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். ஷிவமொக்கா ரூரல் புரலே பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக தொட் டபேட் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அங்கு சென்று அக்பரை சுற்றி வளைத்தனர். கான்ஸ்டபிள் ஈஸ்வர் நாயக்கை கத்தியால் தாக்கிவிட்டு, அக்பர் தப்பிச் செல்ல முயன்றார். இதனால் அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டு, எஸ்.ஐ., மிதுன் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை