நீதிபதி அறையில் அத்துமீறிய ரவுடி
ஆனேக்கல் :
அத்துமீறிய ரவுடி
பெங்களூரு ஆனேக்கல்லின் ஹில்லலள்ளியை சேர்ந்தவர் வினய், 25. பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இவரின் பெயர், சூர்யாநகர் போலீசில் ரவுடி பட்டியலில் உள்ளது.குற்ற வழக்கு ஒன்றில், இவரை சில நாட்களாக போலீசார் தேடி வந்தனர். இதையறிந்த அவர், மூன்றாவது மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் சரணடைய நேற்று சென்றார். அவரை பார்த்த போலீசார், அவரை நோக்கிச் சென்றனர். பீதியடைந்த வினய், நீதிமன்ற அறைக்கு சென்று சரணடைய நினைத்தார். நீதிமன்ற கதவு பூட்டப்பட்டிருந்தது.இதனால், கதவு, கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்தார். இதை பார்த்த அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்த நீதிபதி வெங்கடேஷ், ஆனேக்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார், அவரை கைது செய்தனர்.