உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கல்லுாரி மாணவியிடம் ரூ.1 லட்சம் பறிப்பு

 கல்லுாரி மாணவியிடம் ரூ.1 லட்சம் பறிப்பு

பெங்களூரு: பெங்களூரின் பிரபலமான தனியார் கல்லுாரியில் படிக்கும் 19 வயது மாணவி, தனது அந்தரங்க படங்களை காதலனின் மொபைல் போனுக்கு அனுப்பினார். இதையடுத்து, சில நாட்களுக்கு முன் மாணவியின் மொபைல் போனுக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து 'வாட்ஸாப்'பில் மெசேஜ் வந்தது. இதில், மாணவியின் அந்தரங்க படங்கள் அனுப்பப்பட்டு இருந்தன. இதை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். ஒரு லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விடுவேன் என அந்நபர் மிரட்டி உள்ளார். இதனால், அச்சம் அடைந்த மாணவி, அந்நபர் கேட்டது போல ஒரு லட்சம் ரூபாயை, தனது தோழி மூலம் அந்நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பிவிட்டார். இருப்பினும், அந்நபர் மீண்டும் பணம் கேட்டு மிரட்டினார்.பெங்களூரு மத்திய சைபர் பிரிவு போலீசில் மாணவி புகார் அளித்தார். போலீசார், முதலில் மாணவியின் காதலனை சந்தேகப்பட்டனர். இதனால், அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், காதலன் குற்றத்தில் ஈடுபடவில்லை என தெரியவந்து உள்ளது. இதனால், வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ