அரசு அதிகாரியிடம் ரூ.15 லட்சம் சிக்கியது
சிக்கபல்லாபூர் : சிக்கபல்லாபூர் பாகேபள்ளி விவசாய துறை இணை இயக்குநர் சங்கரய்யா. அரசு பணிகளுக்காக, கான்ட்ராக்டர் மஞ்சுநாத்திடம் நேற்று தன் அலுவலகத்தில் வைத்து, இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினார்.லோக் ஆயுக்தா போலீசார், சங்கரய்யாவை கைது செய்தனர். லஞ்ச பணம், இரண்டு லட்சம் லஞ்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சங்கரய்யாவின் இருக்கையின் கீழ் இருந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் 13 லட்சம் ரூபாய் இருந்தது. இதையடுத்து 15 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.