பைக்கில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் அபேஸ்
கலபுரகி: பைக்கின் பெட்ரோல் டாங்க் மீது வைத்திருந்த பணத்தை, மர்ம நபர் அபேஸ் செய்து தப்பியோடினார். இக்காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.கலபுரகி மாவட்டம் சித்தாபுராவில் வசிப்பவர் மஞ்சுநாத் காசி. இவர் நேற்று மதியம் சித்தாபுரா பஸ் நிலையம் அருகில் உள்ள வங்கியொன்றில், தன் கணக்கில் இருந்து 1.20 லட்சம் ரூபாய் எடுத்தார்.அதை கவரில் வைத்து, தன் பைக்கின் பெட்ரோல் டாங்க் மீது வைத்துக்கொண்டு, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர், 'மஞ்சுநாத்திடம் நீங்கள் பணத்தை கீழே போட்டுள்ளீர்கள், பாருங்கள்' என்றார்.இதை நம்பிய அவர், பைக்கை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி பணம் எங்கு விழுந்துள்ளது என, தேடத் துவங்கினர். வந்த வழியாக நடந்து சென்று தேடினார். இதற்காகவே காத்திருந்த நபர்கள், பைக்கின் பெட்ரோல் டாங்கில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பினர்.இதை அறிந்த அவர், சித்தாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் சம்பவ இடத்தில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மர்மநபர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.