மேலும் செய்திகள்
நாட்டுப்புற கலைஞர்களின் முப்பெரும் விழா
23-Feb-2026
கன்னடம், கலாச்சாரத்துறை 'பெங்களூரு திருவிழா' ஏற்பாட்டாளர்களின் ஒருங்கிணைப்பில், மாநிலத்தில் ஆண்டு தோறும் நாடகம், ஓவியக்கலை, சிற்பக்கலை உட்பட மற்ற கலை, கலாசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய, ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் கிராமிய கலைஞர்கள், பழங்குடியின கலைஞர்கள், வித்வான்கள், வாத்திய கலைஞர்கள் அடங்கிய மாநாடுகள், 'ஜானபத சங்கமா' என்ற பெயரில் நடத்தப்படும். இதற்காக இரண்டு கோடி ரூபாய் செலவிடப்படும் தேசிய கவிஞர் சிவருத்ரப்பாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது பெயரில் விருது வழங்க இரண்டு கோடி ரூபாய் வழங்கப்படும் சந்த சிசுனாள ஷரீபா மற்றும் வீர ராணி பெளவடி மல்லம்மா பெயரில், தனித்தனியாக அறக்கட்டளை அமைக்கப்படும் ஞானபீட விருது பெற்ற அனந்த மூர்த்தியின் பெயரில், குவெம்பு பல்கலை கழகத்தில், ஒரு ஆய்வு மையம் அமைக்கப்படும் சிறார்களுக்காக கர்நாடக சாஹித்ய அகாடமி சார்பில், பம்பா, ரன்னா, பசவாதி சரணரு, சர்வக்ஞர், கனகதாசர், புரந்தர தாசர், சஞ்சி ஹொன்னம்மா உட்பட பல கவிஞர்களின் படைப்புகள், எளிமையான புத்தகமாக அச்சிட்டு வெளியிடப்படும் தலித் கவிஞர் சித்தலிங்கய்யா உட்பட, 50 ஆண்டுகளில் தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை தொகுத்து, 'அர்த ஷதமானத தலித் சாஹித்யா' என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படும். இதற்காக ஒரு கோடி ரூபாய் செலவிடப்படும் தலித் கவிஞர் சித்தலிங்கய்யா, நாகராஜ் பெயரில் டிரஸ்ட் அமைக்கப்படும் காகோடு சத்தியா கிரகத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட, 'கொளகா' புத்தகம் நாடகமாக்கப்பட்டு, மாநிலம் முழுதும் திரையிடப்படும் சாமராஜேந்திரா கலை கல்லுாரி வளாகத்தில், கலா கேலரி ஆடிட்டோரியம் கட்டுவது உட்பட சில பணிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, அந்தமான் தீவில் தண்டனைக்கு ஆளான, கர்நாடகாவின், 59 கன்னடர்களின் வீர வரலாறு, கர்நாடக சாஹித்ய அகாடமி மூலம் புத்தகமாக வெளியிடப்படும் கர்நாடக ஒருங்கிணைப்புக்கு, முக்கிய காரணமாக இருந்த, தார்வாடின் கர்நாடக வித்யாவர்த்தகா சங்கத்தின், பல்வேறு பணிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் திகளர் ச முதாயத்தினர், பல ஆண்டுகளாக பெங்களூரில் கரக உத்சவம் நடத்துகின்றனர். நடப்பாண்டு கரக உத்சவத்துக்கு இரண்டு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் துமகூரின் குப்பி வீரண்ணா கலா மந்திரை தரம் உயர்த்த, மூன்று கோடி ரூபாய் வழங்கப்படும்.
23-Feb-2026