உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மலை மஹாதேஸ்வர கோவில் உண்டியலில் ரூ.2.65 கோடி

மலை மஹாதேஸ்வர கோவில் உண்டியலில் ரூ.2.65 கோடி

சாம்ராஜ்நகர்: மலை மஹாதேஸ்வர சுவாமி கோவில் உண்டியலில், 34 நாட்களில் 2.65 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.சாம்ராஜ்நகர், ஹனுார் தாலுகாவில் மலை மஹாதேஸ்வரா மலை கோவில் அமைந்துள்ளது. அதிக வருவாய் தரும் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். மாதந்தோறும் உண்டியலில் உள்ள காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும் பணிகள் நடந்து முடிந்தன. இப்பணிகள், மலையில் உள்ள வணிக வளாகத்தில், மல்லிகார்ஜுன சுவாமிகள் முன்னிலையில் நடந்தன.இதுகுறித்து, மலை மஹாதேஸ்வரா மேம்பாட்டு ஆணைய செயலர் ரகு கூறியதாவது:உண்டியலில் 2.65 கோடி ரூபாய் ரொக்கம்; 58 கிராம் தங்கம், 2.7 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தன. உண்டியலில், 15 வெளிநாட்டு கரன்சிகள், 36 புழக்கத்தில் இல்லாத 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இ - உண்டியலில் 6.66 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி