வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்த ரூ.5,000 கோடியில் திட்டம்
வருவாய் l கர்நாடக நில அடுக்கு திட்டத்தின் கீழ், சொத்துகளை பதிவு செய்யும் பூமி, மோஜினி, காவேரி, இ --- சுவாது, இ -- சொத்து ஆகிய செயலிகள், புவியியல் தள அமைப்பு அடிப்படையில் டிஜிட்டல் மயமாக்கப்படும் l பூமி 8.0 செயலி, 50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் l வருவாய் துறையின் கீழுள்ள, 43 சேவைகளில் வெளிப்படை தன்மைக்காக முக அங்கீகாரம் கட்டாயமாக்கப்படும் l வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில், கர்நாடக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மற்றும் கர்நாடக நில அபகரிப்பு தடை சிறப்பு நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் சி.சி.எம்.எஸ்., மற்றும் ஆர்.சி.சி.எம்.எஸ்., மென்பொருளுடன் இணைக்கப்படும் l நில அளவையர்கள், கிராம நிர்வாக அதி காரி பணியிட மாற்றம் தொடர்பான கவுன்சிலிங் நேர்மையான முறையில் நடத்தப்படும் l 160 ஆண்டுகளுக்கு மேலான சொத்துகளின் ஆவணங்களை பாதுகாக்கும் வகையில், உதவி ஆவண பாதுகாப்பு அலுவலக அதிகாரி அலுவலகத்தில், 72 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட ஆவண பாதுகாப்பு அறை உருவாக்கப்படும் l பசவகல்யாண் வளர்ச்சி ஆணையம் சார்பில் கட்டப்படும், அனுபவா மண்டப பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டிற்குள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். l காவிரி 3.0 செயலி, 65 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். ஏ.ஐ., அடிப்படையில் காகிதமில்லா பதிவு முறை செயல்முறை செயல்படுத்தப்படும் l முத்திரை தாள் பதிவு, ஆவண சேமிப்பு உட்பட அனைத்து செயல்முறைகளும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் l பத்திர பதிவு துறையில் உள்ள 207 துணை பதிவாளர் அலுவலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் l ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு துணை பதிவாளர் அலுவலகம், பதிவு உத்தரவாத மையமாக நவீனமாயக்கப்படும். பாஸ் போர்ட் சேவை மையங்கள் போல பொது - தனியார் பங்களிப்பில் ஐந்து மெகா பதிவு மையங்கள் திறக்கப்படும் l உலக வங்கி நிதி உதவியுடன், பெங்களூரு நகரில் வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்த 5 ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் செலவில் பல பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் l 2026 -- 2027ம் நிதியாண்டில் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்காக 1,162 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.