உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பொதுத்தேர்வு குறித்து வதந்தி: கல்வி அமைச்சர் எச்சரிக்கை

 பொதுத்தேர்வு குறித்து வதந்தி: கல்வி அமைச்சர் எச்சரிக்கை

பெங்களூரு: ''நடப்பாண்டு, 10, பி.யு., 2ம் ஆண்டு பொது தேர்வுகள் குறித்து போலி செய்தி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தொடக்க கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறினார். கர்நாடகாவில் 10, பி.யு., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு பொது தேர்வு மூன்று முறை நடத்தப்படுகிறது. இது இரண்டு முறையாக குறைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இது மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து, தொடக்க கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறுகையில், ''கர்நாடகாவில் 10, பி.யு., 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் இரண்டு முறைகளாக குறைக்கப்படுவது என்பது போலியான செய்தி. இதை யாரும் நம்ப வேண்டாம். ''தவறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீதும், சமூக வலைதளங்களில் போலியான செய்தி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் விஷயத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் ,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி