உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரை புகழ்ந்த ரஷ்ய பெண்

பெங்களூரை புகழ்ந்த ரஷ்ய பெண்

பெங்களூரு : பெங்களூரை புகழ்ந்து தள்ளிய ரஷ்ய பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண் யூலியா அஸ்லமோவா. இவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பெங்களூரை பற்றி பெருமையாக கூறி, வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில் அவர் கூறியதாவது: நான் கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவின் பல நகரங்களில் பணிபுரிந்து உள்ளேன். பெங்களூரு ஐ.டி., அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் சக ஊழியர்களிடம் பழகும் தன்மையை பார்த்து வியந்தேன். புதுடில்லி, ஜெய்ப்பூர், சென்னை, மும்பை ஆகிய நகரங்களை விட பெங்களூரில் வானிலை சிறப்பாக உள்ளது. இங்கு வானிலை எப்போதும் சீராக உள்ளது. இதனால் 'ஏசி'யே தேவையில்லை. பெங்களூரு எனக்கு மிகவும் பிடித்த நகரம். இங்குள்ளவர்கள் அன்பாக பேசக்கூடியவர்கள்; பழகக்கூடியவர்கள். இதனாலே, இங்குள்ள மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ