உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வீட்டு பணியாளர்களுக்கு சம்பளம்: புதிய சட்டம் கொண்டு வர முடிவு

வீட்டு பணியாளர்களுக்கு சம்பளம்: புதிய சட்டம் கொண்டு வர முடிவு

பெங்களூரு: வீட்டுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்வதற்காக புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ள கர்நாடக அரசு, அதற்காக, கர்நாடக மாநில வீட்டுப் பணியாளர் சமூக பாதுகாப்பு நல வாரியம் அமைக்க முன் வந்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பெரும்பாலான வீட்டு பெண்கள், குடும்பத்தை காக்க, பல வீடுகளில் பணியாற்றி வருகின்றனர். செல்வந்தவர்கள் வீடுகள் என்றால், நாள் முழுதும் அங்கு பணியாற்றுபவர். நடுத்தர குடும்பத்தினர் வீடுகள் என்றால், குறைந்த சம்பளத்தில், இரண்டு மூன்று வீடுகளில் காலை, மதிய உணவு தயார் செய்து கொடுத்த பின் சென்றுவிடுவர். வீட்டுப் பணியாளர்கள் நலனுக்காக, 'வீட்டுப் பணியாளர் நலம் மற்றும் சமூக பாதுகாப்பு' சட்டத்தை அமல்படுத்த, முதல்வர் சித்தராமையா அரசு முன்வந்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநில வீட்டுப் பணியாளர் சமூக பாதுகாப்பு நல வாரியம் அமைக்கவும்; அதன் மூலம் வரைவு மசோதா தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது. இதில், கர்நாடக மாநில வீட்டுப் பணியாளர் சமூக பாதுகாப்பு நல வாரியம், முத்தரப்பு அமைப்பாக கட்டமைக்கப்பட உள்ளது. இந்த வாரியத்தில், அரசு அதிகாரிகள், வீட்டுப் பணியாளர்களும் அவர்களின் தொழிற்சங்கங்கள், முதலாளிகள், ஏஜென்சிகள், டிஜிட்டல் பிளாட்பார்ம்கள், வீட்டு நல சங்கங்கத்தின் பிரதிநிதிகள் இருப்பர். இந்த வாரியம் தயாரிக்கும் வரைவு மசோதாவில், 'சமூக பாதுகாப்பு மற்றும் நல நிதியை உருவாக்குவதாகும். முதலாளிகள், வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் அல்லது சேவை தளங்கள், வீட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில், ஐந்து சதவீதம் வரை நிதி பங்கு ஏற்க கட்டாயமாக்கப்படும். இந்த பங்களிப்பு, டிஜிட்டல் முறையில் செய்யப்பட வேண்டும் உட்பட பல முன்மொழிவுகள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி