வரும் 21ல் பசவனகுடியில் சங்கீத மும்மூர்த்திகள் நாடகம்
பசவனகுடி: ஸ்ரீராமலலிதா கலாமந்திரா கலாசார நிறுவனம் சார்பில், பெங்களூரில் முதன் முறையாக, 'சங்கீத மும்மூர்த்திகள்' இசை நாடகம் வரும் 21ம் தேதி நடக்கிறது. சங்கீத மும்மூர்த்திகள் இடையே நிறைந்திருந்த சகோதரத்துவத்தை, அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் ஸ்ரீராமலலிதா கலாமந்திரா கலாசார நிறுவனம் சார்பில், 'சங்கீத மும்மூர்த்திகள்' இசை நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நாடகத்துக்கு பாம்பே ஜெயஸ்ரீ இசை அமைத்துள்ளார். 30க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள், தங்கள் திறமைகளால், ஒரு சிறந்த இசை நாடகமாக மாற்றி உள்ளனர். இத்தகைய சிறப்பு மிக்க 'சங்கீத மும்மூர்த்திகள் இசை நாடகம்' பெங்களூரில் முதன்முறையாக வரும் 21ம் தேதி மாலை 5:30 மணிக்கு, பசவனகுடியில் உள்ள காயன சமாஜாவில் அரங்கேற்றம் செய்யப்படுகிறது. இந்த நாடகத்துக்கு நுழைவு கட்டணம் இல்லை.