உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜாதிவாரி சர்வே விவகாரம் சிவகுமாருக்கு சதீஷ் ஆதரவு

ஜாதிவாரி சர்வே விவகாரம் சிவகுமாருக்கு சதீஷ் ஆதரவு

பெலகாவி : ''ஜாதிவாரி சர்வேயில் உள்ள கேள்விகளை குறைக்க வேண்டுமென்று துணை முதல்வர் சிவகுமார் கூறியதை, நான் வரவேற்கிறேன்,'' என, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறி உள்ளார். பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி: கல்யாண கர்நாடகாவின் மேம்பாட்டுக்காக சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடத்தியது போன்று, கித்துார் கர்நாடகா மேம்பாட்டுக்காகவும் சிறப்பு அமைச்சரவையை கூட்டி, அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இதுதொடர்பாக கித்துார் கர்நாடகா பகுதியை சேர்ந்த 34 எம்.எல்.ஏ.,க்களுடன் சென்று, முதல்வர் சித்தராமையாவை சந்திப்பேன். ஜாதிவாரி சர்வேயில் உள்ள கேள்விகளை குறைக்க வேண்டுமென, துணை முதல்வர் சிவகுமார் கூறி இருப்பதை நானும் வரவேற்கிறேன். தாங்கள் விரும்பும் கேள்விகளுக்கு மட்டும் மக்கள் பதிலளிக்க வேண்டும். ஒருவரை பற்றி எல்லா விபரங்களையும், தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். அரசியல் விவகாரத்தில் எதிரும், புதிருமாக இருந்தாலும், ஜாதிவாரி சர்வே விஷயத்தில் சிவகுமாருக்கு ஆதரவாக, சதீஷ் ஜார்கிஹோளி பேசியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி