எஸ்.சி., கணக்கெடுப்பு விரைந்து முடிக்க உத்தரவு
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எஸ்.சி., கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் உத்தரவிட்டு உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் எஸ்.சி., சமூகத்தினர் குறித்து கணக்கெடுப்பு கடந்த 5ம் தேதி துவங்கியது. இதற்காக, 28 தொகுதிகளில் உள்ள பூத் நிலை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.இவர்களை மேற்பார்வையிட அந்தந்த மண்டலங்களில் உள்ள உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இப்பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்.இதற்காக தனி மொபைல் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று சோதனை நடத்துவர். அப்போது, அவர்கள் ஜாதி சான்றிதழ், படிப்பு, ஆண்டு வருமானம், வேலை குறித்த விபரம், ஆதார், ரேஷன் போன்றவற்றை பதிவு செய்து கொள்வர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.