உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறுவனை அடித்து கொன்ற தாயின் 2வது கணவர் கைது

சிறுவனை அடித்து கொன்ற தாயின் 2வது கணவர் கைது

துமகூரு: சிறுவனை அடித்துக் கொன்றுவிட்டு, பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடிய தாயின் இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டார்.சாம்ராஜ் நகரை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி காவ்யா, 22. காவ்யா கருவுற்ற நிலையில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் கிரஷரில் பணியாற்றும் சந்திரசேகர், 24, என்பவருடன் காவ்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவரை பிரிந்து, சந்திரசேகருடன் காவ்யா ஓடிவிட்டார்.துமகூரின் சித்தலிங்கய்யன பாளையாவில் வசிக்க துவங்கினர். காவ்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மிதுன் கவுடா என, பெயர் சூட்டினர். சில ஆண்டுகள் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.சந்திரசேகர் கிரஷரிலும், காவ்யா கார்மென்ட்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றுகின்றனர். மிதுனுக்கு 4 வயதாகிறது. மிதுனை சந்திரசேகருக்கு பிடிக்கவில்லை.'அசோக்கிற்கு பிறந்த குழந்தை வேண்டாம். எங்காவது விட்டு விடலாம்' என, சந்திரசேகர் பிடிவாதம் பிடித்தார். காவ்யா சம்மதிக்கவில்லை. இதே காரணத்தால் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.மார்ச் 20ம் தேதி, காவ்யா பணிக்கு சென்றிருந்தார். தனியாக இருந்த சிறுவனை சந்திரசேகர் மனம் போனபடி தாக்கியதில், சிறுவன் மயங்கினான். அக்கம், பக்கத்தினரிடம் மகனை பாம்பு கடித்ததாக சந்திரசேகர் நாடகமாடினார்.கிராமத்தினர், சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் இறந்துவிட்டதாக கூறினர். அதன்பின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.அடக்கம் செய்வதற்கு முன்பு, அதே கிராமத்தின் கங்காதரய்யா என்பவர், சிறுவனின் உடலை மொபைல் போனில் போட்டோ எடுத்திருந்தார். சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பின், கங்காதரய்யா எதேச்சையாக, மொபைல் போனில் சிறுவனை பார்த்தபோது, அவரது உடலில் காயங்கள் இருப்பதை கவனித்தார்.சந்தேகம் அடைந்த அவர், மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சந்திரசேகரை தீவிரமாக விசாரித்தபோது, சிறுவனை அடித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். சிறுவனின் உடலை, நேற்று தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர்.சிறுவனின் கொலையில், தாய்க்கும் தொடர்பிருக்குமோ என, போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, அவரையும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி