உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ‘ரகசிய புலனாய்வு என்பது பைபாஸ் அறுவை சிகிச்சை’

‘ரகசிய புலனாய்வு என்பது பைபாஸ் அறுவை சிகிச்சை’

கதக்: ‘‘ரகசிய புலனாய்வு என்பது ‘பைபாஸ் அறுவை’ சிகிச்சை போன்றது,’’ என பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார். கதக்கில் நேற்று அவர் அளித்த பேட்டி: ரகசிய புலனாய்வு என்பது ‘பைபாஸ் அறுவை’ சிகிச்சை போன்றது. ஏன், எப்போது, என்ன நடந்தது என்பது குறித்து யாரிடமும் முழுமையான தகவல் இல்லை. விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின், அரசு தகவல்களை வெளியிடும். கரும்பு விவசாயிகள் பிரச்னையில் பந்தும், மட்டையும் மத்திய அரசின் கையில் தான் உள்ளது. ஆதரவு விலை உயர்த்தப்பட்டால், விவசாயிகளுக்கும், சர்க்கரை ஆலைகளுக்கும் பலன் கிடைக்கும். கடந்த ஏழு ஆண்டுகளாக சர்க்கரை விலை உயர்த்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை