செகந்திராபாத் அரிசிகெரே சிறப்பு ரயில்
பெங்களூரு : செகந்திராபாதில் இருந்து ஹாசனின் அரிசிகெரே வாராந்திர ரயில், வரும் 13 முதல் ஆக., 31 வரை எட்டு நாட்கள் இயக்கப்படுகிறது.ரயில்வே அறிக்கை: ரயில் எண் 07079 செகந்திராபாத் - அரிசிகெரே வாராந்திர சிறப்பு ரயில், வரும் 13ம் தேதி முதல் ஆக., 31ம் தேதி வரை ஞாயிற்று கிழமை தோறும் மாலை 6:05 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 12:45 மணிக்கு அரிசிகெரே வந்தடையும்.மறுமார்க்கத்தில் எண் 07080 அரிசிகெரே - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில், திங்கட்கிழமை தோறும் மதியம் 2:00 மணிக்கு அரிசிகெரேயில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.