மேலும் செய்திகள்
உச்சிப்புளியில் 200 கிலோ கடல் அட்டை பறிமுதல்
01-Apr-2025
உடுப்பி: கடலோர பாதுகாப்பு படை எஸ்.பி., மிதுன் உடுப்பியில் நேற்று அளித்த பேட்டி:காஷ்மீர் பஹல்காம் சம்பவத்தை அடுத்து, கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி உள்துறையிடம் இருந்து உத்தரவு வந்தது. இதையடுத்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில், கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபடுகின்றனர். மீனவர்கள், உள்ளூர் இளைஞர்களின் உதவியையும் நாடி உள்ளோம். சந்தேகப்படும்படி யாரையாவது பார்த்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கூறி இருக்கிறோம்.மூன்று மாவட்டங்களிலும் கடலோர பகுதியை ஒட்டி, ஒன்பது போலீஸ் நிலையங்கள் உள்ளன. இன்ஸ்பெக்டருடன், கடலோர காவல்படையினர் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். வேகமாக செல்லும் படகுகள் மூலம், ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
01-Apr-2025