உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பானஸ்வாடி : ஹென்னுாரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு தோழி வீட்டில் இருந்து, தன் வீட்டிற்கு, ஸ்கூட்டரில் தனியாக சென்றார். அவரை பின்தொடர்ந்து பைக்கில் இரு வாலிபர்கள் சென்றனர். ஹென்னுார் பிரதான சாலையில் ஸ்கூட்டரை மறித்தனர்.பைக்கில் இருந்து இறங்கிச் சென்று, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். வாலிபர்கள் அங்கிருந்து தப்பினர். இளம்பெண் அளித்த புகாரில் பானஸ்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ