உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பிரதமர் மோடி மீது சிவகுமார் விமர்சனம்

 பிரதமர் மோடி மீது சிவகுமார் விமர்சனம்

ஹூப்பள்ளி: ''வாக்குறுதி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை,'' என, துணை முதல்வர் சிவகுமார் கூறினார். இது குறித்து, அவர் கூறியதாவது: கர்நாடகாவில் கடந்த சட்டசபை தேர்தலின் போது, என்னென்ன வாக்குறுதிகள் அளித்தோமோ, அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டன. இந்தியாவிலேயே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒரு மாநிலம் கர்நாடகா தான். கர்நாடகாவில் அளித்த ஐந்து வாக்குறுதி திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மேலும், சிக்கல் இல்லாமல் செயல்படுத்தப்பட்டும் வருகின்றன. இதை மாநிலத்தில் ஒவ்வொரு சாதாரண மனிதனிடம் சென்று நீங்களை கேட்டுப் பார்க்கலாம். வேண்டுமென்றால், ஒரு சர்வே கூட எடுங்கள். வாக்குறுதி திட்டங்களுக்காக, 1.25 லட்சம் கோடி செலவிடப்பட்டு உள்ளது. இது தான் காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடு. நாடு முழுதும் உள்ள பல மாநிலங்களில் தேர்தல் நேரத்தில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பல வாக்குறுதிகளை அளிக்கிறது. ஆனால், ஆட்சியை பிடித்த பின், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது. இதற்கு மஹாராஷ்டிராவே சான்று. மஹாராஷ்டிராவில் அனைத்து வாக்குறுதி திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், வாக்குறுதி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி இவ்வளவு பொய்களை சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். மதச்சார்பற்ற அரசு அமையும். கர்நாடகாவில் நடக்கும் இடைத்தேர்தலிலும் காங்கிரசே வெற்றி பெறும். இவ்வாறு சிவகுமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை