உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜப்பானில் இருந்தபடி ஆஷா ஊழியர்களிடம் ‘வீடியோ’ அழைப்பில் பேசிய சிவகுமார்

ஜப்பானில் இருந்தபடி ஆஷா ஊழியர்களிடம் ‘வீடியோ’ அழைப்பில் பேசிய சிவகுமார்

– நமது நிருபர் –: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆஷா ஊழியர்களிடம், ‘வீடியோ காலில்’ பேசிய முதல்வர் சிவகுமார், போராட்டத்தை கைவிடும்படி கோரிக்கை வைத்தார். மாதம், 15,000 ரூபாய் மதிப்பூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பெங்களூரு சுதந்திர பூங்காவில், ஆஷா சுகாதார ஊழியர்கள் கடந்த 8 நாட்களாக இரவு, பகல் பாராமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் சிவகுமார் நடத்திய பேச்சு, தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, சிவகுமார் ஜப்பானுக்கு நேற்று முன்தினம் சென்றார். ஆஷா ஊழியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணாமல் சிவகுமார் வெளிநாட்டுக்கு பயணம் செல்வதா என பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, நேற்று முன்தினம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, ஜப்பானில் புல்லட் ரயிலில் சென்றபடியே சிவகுமார், மொபைல்போனில் ‘வீடியோ கால்’ மூலம் ஆஷா ஊழியர்களுடன் நேற்று பேசினார். அவர் பேசுகையில், ‘என்னை நம்பி போராட்டத்தை கைவிடுங்கள். உங்கள் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன். ‘நீங்கள் என் சகோதரிகள் போன்றவர்கள். உங்களின் வலிகளை நான் அறிவேன். உங்கள் கோரிக்கைகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றும்’ என்றார். இருப்பினும், எழுத்துப்பூர்வமான அறிக்கையை மட்டுமே நம்புவோம் எனவும், வாய்மொழியான வாக்குறுதிகளை நம்ப மாட்டோம் என்று கூறிய ஆஷா ஊழியர்கள், மழையிலும் நேற்று போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ