உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கால்பந்து போட்டியில் சிவராஜ் நகர் அணி வெற்றி

கால்பந்து போட்டியில் சிவராஜ் நகர் அணி வெற்றி

தங்கவயல்: மாரிகுப்பம் பிராங்க் அண்டு கோ மைதானத்தில் நடந்த சிறுவர்களுக்கான கால்பந்து போட்டியில் சிவராஜ்நகர் சூப்பர் ஸ்ட்ரைக் அணி வெற்றி பெற்றது. தங்கவயலில் நேற்று முன்தினம், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் கால்பந்து போட்டியில் எட்டு அணிகள் விளையாடின. இறுதி ஆட்டத்தில் உரிகம் சிவராஜ்நகரின் சூப்பர் ஸ்ட்ரைக் அணியும், அசோக்நகரின் சி.ஆர்., செவன்ஸ் அணியும் மோதின. இதில் சி.ஆர்., செவன்ஸ் அணிக்கு எதிராக சூப்பர் ஸ்ட்ரைக் அணி, 4 கோல் போட்டு வெற்றி பெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜான் கென்னடி, வின்னர், ரன்னர் அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை