உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஏர்போர்ட் தபால் அலுவலகத்தில் சூனியம் பார்சலால் அதிர்ச்சி

 ஏர்போர்ட் தபால் அலுவலகத்தில் சூனியம் பார்சலால் அதிர்ச்சி

பெங்களூரு: பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வழக்கமாக வெடிகுண்டு மிரட்டல் தான் வரும். ஆனால் இம்முறை, ஆணும், பெண்ணும் தனித்தனியாக நிர்வாணமாக இருக்கும் புகைப்படம், எலுமிச்சை பழம், தக்காளி மற்றும் பூக்கள் பார்சலில் வந்ததால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய தபால் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் பார்சல் ஒன்று வந்தது. அதை ஊழியர்கள் பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். பார்சலில் ஆணும், பெண்ணும் தனித்தனியாக நிர்வாணமாக இருக்கும் புகைப்படம், எலுமிச்சை பழம், தக்காளி, மல்லிகைப்பூ, கருப்பு, சிவப்பு கயிறு, இரும்பு துண்டு, டூத்பேஸ்ட் இருந்தது. இது சூனியம் என்பதை உணர்ந்தனர். தபால் அலுவலகத்துக்கு உள்ளே சென்று பணியாற்ற ஊழியர்கள் அச்சப்படுகின்றனர். இதையறிந்த விமான நிலைய நிர்வாகம், மூத்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், கெம்பே கவுடா விமான நிலைய போலீசில் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை