மேலும் செய்திகள்
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
பீதர்: பீதரில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்தார். பீதர் மாவட்டம், கமல் நகரின் முத்தோல்.பி கிராமத்தை சேர்ந்தவர் குண்டப்பா ஹொட்கே, 85. இவரது மனைவி லட்சுமிபாய், 83. கடந்த 70 ஆண்டுகளாக இதே கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த லட்சுமிபாய், கடந்த 24ம் தேதி மரணமடைந்தார். இதனால் குண்டப்பா வேதனையில் இருந்தார். யாருடனும் பேசாமல் மூன்று மணி நேரம் இதையே நினைத்து அமர்ந்திருந்தவர், அப்படியே சாய்ந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சடலத்தை வீட்டுக்கு கொண்டு வந்தனர். ஒரே நாளில் கணவன் - மனைவி உயிரிழந்தது, கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.
29-Sep-2025