உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அதிகரிக்கும் போலி செய்திகள் உள்துறை அறிக்கையில் அதிர்ச்சி

அதிகரிக்கும் போலி செய்திகள் உள்துறை அறிக்கையில் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் போலி செய்திகளுக்கு எதிராக பதிவான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக உள்துறை தெரிவித்து உள்ளது.உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகாவில் கடந்த மூன்று ஆண்டுகளில், போலி செய்திகள் பரவுவது அதிகரித்து உள்ளது. இதில் பெங்களூரு, உத்தர கன்னடா மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. மாநிலத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், போலி செய்திகளுக்கு எதிராக 259 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 2023ல், 107 வழக்குகளும், 2024ல் 139 வழக்குகளும், இந்த ஆண்டில் இதுவரை 13 வழக்குகளும் பதிவாகி உள்ளன.கடந்த மூன்று ஆண்டுகளில் பெங்களூரில் 95 வழக்குகளும், உத்தர கன்னடாவில் 49 வழக்குகளும் பதிவாகி உள்ளன. இதில், 75 வழக்குகள் மட்டுமே விசாரணையில் உள்ளன. ஆறு வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து உள்ளது.மேலும், 'டீப் பேக்' தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பணம் சம்பாதித்தது, 'ஏஐ' மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி பேசுவது போல தயார் செய்யப்பட்ட வீடியோ மூலம் 83 லட்சம் ரூபாயை ஏமாற்றிய வழக்குகள் உள்ளன.போலி செய்திகள் பரவுவதை தடுக்க, ஒவ்வோரு போலீஸ் நிலையத்திலும் மாநில உளவுத்துறையில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், விசாரணை மந்தமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ