உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முதல்வர் பதவியில் 8 ஆண்டு சித்தராமையா புதிய சாதனை

 முதல்வர் பதவியில் 8 ஆண்டு சித்தராமையா புதிய சாதனை

பெங்களூரு: கர்நாடக அரசியலில் 8 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என்ற புதிய சாதனையை சித்தராமையா படைத்து உள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த அரசு அமைந்து நாளையுடன் மூன்று ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என்ற புதிய சாதனையை சித்தராமையா நேற்று படைத்து உள்ளார். கடந்த 2013 - 2018 காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகள் 4 நாட்கள்; தற்போதைய ஆட்சியில் நேற்றுடன் சேர்த்து 2 ஆண்டுகள் 361 நாட்கள் என 8 ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக இருந்து உள்ளார். இதற்கு முன்பு அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை நிஜலிங்கப்பாவிடம் இருந்தது. அவர் 7 ஆண்டுகள் 239 நாட்கள் முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல மாநிலத்தில் அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமையும் சித்தராமையா வசமே உள்ளது. நிதி அமைச்சராக அவர், இதுவரை 17 பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை