உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சித்தராமையா ராஜினாமா : சொந்த ஊர் மக்கள் வருத்தம்

சித்தராமையா ராஜினாமா : சொந்த ஊர் மக்கள் வருத்தம்

மைசூரு: மைசூரு மாவட்டம் வருணா தாலுகா சித்தராமயனஹுண்டி கிராமம் தான், சித்தராமையாவின் சொந்த ஊர். சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய போகிறார் என்று தெரிந்ததும், கிராமத்து இளைஞர்கள் பெங்களூரு புறப்பட்டு சென்றனர். இதனால் கிராமமே வெறிச்சோடியது. சித்தராமையா ராஜினாமா செய்த தகவலை பார்த்து, கிராம மக்கள் வருத்தம் அடைந்தனர். சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். அன்னபாக்யா திட்டத்தை கொண்டு வந்த அவரை, 'அன்னராமையா' என்று கூறி, மக்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மைசூரு ராமகிருஷ்ணாநகரில் உள்ள, சித்தராமையா வீடும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை