உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரியல் எஸ்டேட் தொழிலதிபர், மகன் கொலை; முன்னாள் பங்குதாரர் உட்பட ஆறு பேர் கைது

ரியல் எஸ்டேட் தொழிலதிபர், மகன் கொலை; முன்னாள் பங்குதாரர் உட்பட ஆறு பேர் கைது

ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பண விவகாரத்தில் பெங்களூரு தொழிலதிபர், அவரது மகனை, ஆந்திராவில் கடத்திக் கொலை செய்த முன்னாள் பங்குதாரர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு, மஹாதேவபுராவை சேர்ந்தவர் வீராசாமி ரெட்டி, 60; ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவரும் இவரது மகன் பிரசாந்த் ரெட்டியும், 37, கடந்த மாதம் 23ம் தேதி வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராக, ஆந்திரா மாநிலத்துக்குச் சென்றனர். நரசராவ் பேட்டில் லாட்ஜ் ஒன்றின் வெளியே காரை நிறுத்தினர். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர், அதே காரில், தந்தை, மகனை கடத்திச் சென்றனர். அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரித்து செல்வதற்குள், தந்தை, மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, அவர்களின் உடல்களை காலி இடத்தில் வீசிவிட்டு, அந்த கும்பல் தப்பியது. நரசராவ் பேட் போலீசார் வழக்குப் பதிவு செ ய்து விசாரித்தனர். வீராசாமிக்கும், அவரது பங்குதாரர் மாதவரெட்டிக்கும் இடையே பகை இருந்தது தெரிய வந்தது. தீவிர தேடுதலுக்குப் பின் மாதவரெட்டி, அனில் ரெட்டி, நாகி ரெட்டி, சின்னா ரெட்டி, கோவி ரெட்டி, ரகுராம் ரெட்டி ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மாத வரெட்டி கூறியதாக போலீசார் கூறியது: வீராசாமி ரெட்டியும், மாதவரெட்டியும் ரியல் எஸ்டேட்டில் பங்குதாரர்கள். 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து விஷயத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. வீராசாமி ரெட்டி, தன்னை ஏமாற்றிவிட்டதாக மாதவரெட்டி கருதினார். அ வரை கொல்லத் திட்டமிட்டார். முதலில் வீராசாமி ரெட்டி மீது ஆந்திர மாநிலத்தில் காசோலை மோசடி வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்துக்கு வரவழைத்தனர். சம்பவ தினத்துக்கு முன்பு, வீராசாமியின் மகன் பிரசாந்த் ரெட்டிக்கு, மாதவரெட்டி போன் செய்து, சமரசம் செய்து கொள்ளலாம் என்று நரசராவ் பேட்டைக்கு வரவழைத்து கொன்றது தெரிய வந்துள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசா ரிக்கின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை