உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / துணை முதல்வரின் வீட்டுக்குள் புகுந்த பாம்பு

துணை முதல்வரின் வீட்டுக்குள் புகுந்த பாம்பு

பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாரின் இல்லத்தில், நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பெங்களூரின், சதாசிவநகரில் துணை முதல்வர் சிவகுமாரின் இல்லம் உள்ளது. நேற்று மதியம் 2:00 மணியளவில், இவரது வீட்டு வளாகத்தில் குட்டி நல்ல பாம்பு தென்பட்டது. இதை கண்டு பீதியடைந்த ஊழியர்கள், பாம்பு வல்லுநர் பிரசன்ன குமாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அவர், சிறிது நேரம் போராடி, பாம்புக்குட்டியை பிடித்தார். இது ஒன்றரை அடி நீளம் இருந்தது. பாம்பு நுழைந்தபோது, சிவகுமார் வீட்டில் இருக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக பாம்பினால், யாருக்கும் எந்த அபாயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து, பிரசன்ன குமார் கூறியதாவது: துணை முதல்வர் சிவகுமாரின் இல்லத்தில், பாம்பு புகுந்தது, இது முதன் முறையல்ல. இரண்டு மாதங்களுக்கு முன்பும் பாம்பு புகுந்தது. நேற்று பிடிபட்டது நல்ல பாம்பு. மாநிலத்தில் வன விலங்குகளால் இறந்தவர்களில், பாம்பு கடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, 2024 முதல் இதுவரை, மாநிலத்தில் 13,000க்கும் மேற்பட்டோர், பாம்புக்கடிக்கு ஆளாகினர். இதில் 100க்கு ம் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாம்புக்கடிக்கு ஆளாகி பி ழைத்த சிலர், உடல் உறு ப்புகள் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை