ராணுவ வீரர் மாரடைப்பால் மரணம்
முல்பாகல்: விடுப்பில் ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரர், மாரடைப்பால் மரணம் அடைந்தார். மணிப்பூரில் ராணுவத்தில் பணி செய்தவர் முனி நாராயணா, 35. இவர், 15 நாட்கள் விடுப்பில், முல்பாகல் அஜ்ஜப்ப பள்ளியில் உள்ள தன் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடல், நேற்று அடக்கம் செய்யப்பட்டது. தகவல் அறிந்து, பெங்களூரிலிருந்து 12 ராணுவ வீரர்கள் வந்தனர். முனி நாராயணா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இறந்த முனி நாராயணாவுக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.