உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தாயாரை திட்டிய உறவினர்; அடித்து கொன்ற மகன் கைது

தாயாரை திட்டிய உறவினர்; அடித்து கொன்ற மகன் கைது

ஞானபாரதி: தாயை திட்டிய உறவினரை, இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, ஞானபாரதி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 26. இவரது உறவினர் அவினாஷ், 36. ஆட்டோ, பள்ளி பஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். மதுவுக்கு அடிமையானதால், இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் பணிக்கு செல்லாமல் இருந்த இவர், சில நாட்களுக்கு முன், கார்த்திக் வீட்டின் அருகில் சிறிய அறையில் வசித்து வந்தார். இவருக்கு கார்த்திக்கின் தாய் தினமும் சாப்பாடு வழங்கி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த அவினாஷ், கார்த்திக்கின் தாயையும், பாட்டியையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். பொறுமை இழந்த தாய், மகனுக்கு போன் செய்து விஷயத்தை கூறினார். கோபத்துடன் வந்த கார்த்திக், வீட்டில் இருந்த இரும்பு ராடால், அவினாஷின் தலை, முதுகில் சரமாரியாக தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். பதற்றமடைந்த தாயும், மகனும் அவினாஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அவினாஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து ஞானபாரதி போலீசாருக்கு, தாயும், மகனும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், கார்த்திகை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி