உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கலபுரகி - பெங்களூரு வந்தே பாரத் ரயில் பிரசாந்தி நிலையத்தில் நின்று செல்லும் தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு

 கலபுரகி - பெங்களூரு வந்தே பாரத் ரயில் பிரசாந்தி நிலையத்தில் நின்று செல்லும் தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு

பெங்களூரு: 'எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - கலபுரகி வந்தே பாரத் ரயில், ஜனவரி, 1 முதல் ஸ்ரீ சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் நின்று செல்லும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன் அறிக்கை: ரயில் எண் 22231: கலபுரகி - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வந்தே பாரத் ரயில், கலபுரகியில் இருந்து காலை 6:10க்கு புறப்பட்டு மதியம், 2:00 மணிக்கு பெங்களூரு வந்தடையும். எண் 22232: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - கலபுரகி வந்தே பாரத் ரயில், பெங்களூரில் இருந்து மதியம், 2:40க்கு புறப்பட்டு, இரவு 10:45 மணிக்கு கலபுரகி சென்றடையும். இவ்விரு ரயில்களும் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கும். இந்த ரயில்கள், ஜனவரி, 1ம் தேதி முதல், ஸ்ரீ சத்யசாய் பிரசாந்தி நிலையத்திலும் நின்று செல்லும். அதேுபோன்று, யாத்கிர், ராய்ச்சூர், மந்த்ராலயா சாலை, குண்டக்கல், அனந்தபூர், எலஹங்கா ஜங்ஷன்களிலும் வழக்கம் போல நின்று செல்லும். அதில் எந்த மாற்றமும் இல்லை. எண் 20703: காச்சிகுடா - யஷ்வந்த்பூர் வந்தேபாரத் ரயில், ஹிந்துப்பூரில் மதியம் 12:08 மணிக்கு நின்று, 12:10க்கு புறப்படும். எண் 20704: யஷ்வந்த்பூர் - காச்சிகுடா வந்தேபாரத் ரயில், ஹிந்துபூரில் மதியம் 3:48 மணிக்கு நின்று, 3:50 மணிக்கு புறப்படும். கிறிஸ்துமசை ஒட்டி, பயணியர் வசதிக்காக எண் 06573: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - கொல்லம் சிறப்பு ரயில், டிச., 25ம் தேதி மதியம் 3:00 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6:30க்கு கொல்லம் சென்றடையும். மறு மார்க்கத்தில் எண் 06574: கொல்லம் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில், டிச., 26ம் தேதி காலை 10:30க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வந்தடையும். பெங்களூரு ஹெஜ்ஜாலா மற்றும் கெங்கேரி ரயில் நிலையங்கள் இடையே ரயில்வே பணிகள் நடப்பதால், எண் 56265: அரிசிகெரே - மைசூரு தினசரி பயணியர் ரயில்; எண் 06269: மைசூரு - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு தினசரி பயணியர் ரயில்; எண் 06270: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - மைசூரு தினசரி ரயில்கள் வரும், 25 மற்றும் ஜன., 8ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன. எண் 56266: மைசூரு - அரிசிகெரே தினசரி பயணியர் ரயில்; எண் 66535: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சன்னபட்டணா தினசரி 'மெமு' ரயில்கள் டிச., 26 மற்றும் ஜன., 9 ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன. எண் 06526: அசோகபுரம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு தினசரி 'மெமு' ரயில், டிச., 25, ஜன., 8 ம் தேதிகளில் சென்னபட்டணாவுடன் நிறுத்தப்படும். எண் 16022: அசோகபுரம் - சென்னை சென்ட்ரல் தினசரி விரைவு ரயில், டிச., 25, ஜன., 8 ம் தேதிகளில் கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். எண் 66580: அசோகபுரம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு தினசரி 'மெமு' ரயில், டிச., 25, ஜன., 8 ம் தேதிகளில் ராம்நகருடன் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ