கர்நாடக பாரத் கவுரவ் ரயிலில் தென்னக தீர்த்த யாத்திரை
பெங்களூரு: கர்நாடக செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:ஹிந்து அறநிலையத்துறை சார்பில், கர்நாடக பாரத் கவுரவ் ரயிலில், பக்தர்களை தென்னக கோவில்களுக்கு தீர்த்த யாத்திரை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 25 முதல் 30ம் தேதி வரையிலான ஆறு நாட்கள் தீர்த்த யாத்திரை இதுவாகும்.இத்திட்டத்தில், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் கோவில்களை தரிசிக்கலாம். இதற்காக ஒரு பயணிக்கு தலா 15,000 ரூபாய் செலவாகும். யாத்திரிகர்கள் 10,000 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும். 5,000 ரூபாயை அரசு மானியமாக வழங்கும்.கட்டண தொகை ரயில் பயணம், உணவு, தங்கும் இடம், உள்ளூர் போக்குவரத்து வசதி, தரிசன வசதி அடங்கியது. ஒவ்வொரு பெட்டியிலும், சுற்றுலா வழிகாட்டி, பாதுகாப்பு ஊழியர்கள் இருப்பர். டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள விரும்புவோர் https:irctctourism.comஇணைய தளத்திலோ அல்லது 93634 88229 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.