உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கன்னட ஆடியில் சாமுண்டி மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை

கன்னட ஆடியில் சாமுண்டி மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை

மைசூரு: ''கன்னட ஆடி மாதத்தை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, சாமுண்டி மலைக்கு இம்முறையும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது,'' என, கே.எஸ்.ஆர்.டி.சி., மைசூரு பிரிவு கோட்ட கட்டுப்பாட்டாளர் வீரேஷ் தெரிவித்தார்.கன்னட ஆடி மாதம் வரும் 26ல் துவங்குகிறது. இதை முன்னிட்டு, இந்தாண்டு ஆடி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சாமுண்டி மலைக்கு தனியார் வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.இந்த நிலையில், மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி., மைசூரு பிரிவு கோட்ட கட்டுப்பாட்டாளர் வீரேஷ் கூறியதாவது:ஆடி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள லலித மஹால் அரண்மனை அருகில் அமைந்துள்ள 18 ஏக்கர் பகுதியில் இருந்து, மலைக்கு பக்தர்களை இலவசமாக அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் வாகனங்களை, லலித மஹால் அருகில் பொது மக்கள் நிறுத்த வேண்டும்.மலைக்கு செல்லும் பஸ்சில் மட்டுமே செல்ல வேண்டும். இந்நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவதால், 49 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.கடந்தாண்டு 49 பஸ்கள், தினமும் 300 முறை இயக்கப்பட்டன. அதே அளவில் இம்முறையும் இயக்கப்படும். அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இம்முறை பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அத்துடன் பெண்கள் அதிகளவில் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை மூன்று வகையான பஸ்கள் இயக்கப்படும். சாதாரண பஸ்கள், 300 ரூபாய் தரிசன டிக்கெட், 2,000 பேக்கேஜ் பெற்றவர்களுக்கு வால்வோ ஏசி பஸ் இயக்கப்பட உள்ளன. பஸ்சில் ஏறவும், இறங்கவும் தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை