உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஓணம் கொண்டாட்டம் கேரளாவுக்கு சிறப்பு பஸ்கள்

ஓணம் கொண்டாட்டம் கேரளாவுக்கு சிறப்பு பஸ்கள்

 பெங்களூரு: 'ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவிற்கு 90 கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்' என, கே.எஸ்.ஆர்.டி.சி., அறிவித்துள்ளது.. கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 2 முதல் வரும் 4ம் தேதி வரை, கேரளாவிற்கு கூடுதலாக 90 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பண்டிகை காலங்களில் பயணியர் சிரமமின்றி பயணிப்பதற்காக, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மைசூரு சாலையில் உள்ள சாட்டிலைட் பஸ் நிலையம், சாந்திநகர் பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும். கேரளாவில் உள்ள கண்ணுார், கோழிக்கோடு, எர்ணாகுளம், பாலக்காடு, திருச்சூர், கோட்டயம், திருவனந்தபுரம் என முக்கிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். பண்டிகை முடிந்து கேரளாவில் இருந்து திரும்பி வருவோருக்கு வசதியாக, அம்மாநிலத்தின் முக்கிய இடங்களில் இருந்து வரும் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். குடும்பத்துடன் பயணம் செய்வோர், நான்கு அல்லது அதற்கு மேலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நபருக்கு, டிக்கெட் கட்டணத்தில் ௫ சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். ஒரே நேரத்தில் ஊருக்கு செல்வதற்கும, அங்கிருந்து திரும்பி வருவதற்கும் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு பத்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். பஸ்கள் புறப்படும் நேரம், டிக்கெட் முன்பதிவு குறித்து அறிவதற்கு www.ksrtc.karnataka.gov.inஎன்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவும் உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !