உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கே.ஆர்.எஸ்., பிருந்தாவன் பூங்காவில் 60 பயணியருக்கு சிறப்பு அனுமதி

கே.ஆர்.எஸ்., பிருந்தாவன் பூங்காவில் 60 பயணியருக்கு சிறப்பு அனுமதி

மாண்டியா : மாண்டியா கே.ஆர்.எஸ்., பிருந்தாவன் பூங்காவுக்கு தாமதமாக வந்த சுற்றுலா பயணியருக்கு நுழைய தடை விதிக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்னையில், டிக்கெட் கவுன்டர் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சுதந்திர தினத்தை ஒட்டி, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணியர், மாண்டியா மாவட்டம் கே.ஆர்.எஸ்., அணையில் அருகில் உள்ள பிருந்தாவனுக்கு வருகை தந்தனர். வார நாட்களில் காலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; வார இறுதி நாட்களில் மாலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரையிலும் திறந்திருக்கும். சுதந்திர தினமான கடந்த 15ம் தேதி, 60 சுற்றுலா பயணியர் இரவு 9:00 மணிக்கு பிருந்தாவன் வந்துள்ளனர். அங்கிருந்த டிக்கெட் கவுன்டர் ஊழியர், 9:00 மணியுடன் முடிந்தது. இனி காலையில் தான் பூங்கா திறக்கப்படும் என்று விளக்கி உள்ளனர். அதற்கு சுற்றுலா பயணி யர், 'இரவு 9:00 மணியுடன் முடிந்தது என்றால், எதற்காக வாகன நிறுத்தும் கட்டணமாக 300 ரூபாய், 500 ரூபாய் வாங்கினீர்கள்' என்று அங்கிருந்த பூங்காவை நிர்வகிக்கும் தனியார் நிறுவன ஊழியர்களிடமும் கேள்வி எழுப்பினர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சில சுற்றுலா பயணியர், டிக்கெட் கவுன்டர் கண்ணாடியை உடைத்தது மட்டுமின்றி, அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். கர்நாடக மாநில தொழிற் பாதுகாப்பு படையினரும், கே.ஆர்.எஸ்., போலீஸ் நிலைய போலீசாரும் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். அங்கு வந்த காவிரி நீராவரி நிகம் லிமிடெட் உதவி செயற்பொறியாளர் பரூக் அகமது அபு, ' உள்ளே சென்று செயற்கை நீரூற்றை காணலாம் அல்லது பணத்தை திருப்பி வாங்கி கொள்ளுங்கள்' என்றார். அதற்கு சுற்றுலா பயணி யர், நிரூற்றை பார்க்க விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து, 60 சுற்றுலா பயணியருக்காக இரவு 9:30 மணிக்கு செயற்கை நீரூற்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணியர் அமைதியாக சென்றனர். வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை